Naan Sellum Paathaiyen | நான் செல்லும் பாதையென்

Loading

பல்லவி
நான் செல்லும் பாதையென்
நேசர் அறிவாரே
நாசம் அணுகாமல் காப்பாரே

மரணப் பள்ளத்தாக்கிலும் – நான்
வரும் எத்தீமைக்கும் அஞ்சேன்
கருத்தாய்க் காத்திட வாக்குத் தவறிடா
வல்ல ஓர் தேவன் உண்டெனக்கு – நான்

கண்ணீரின் பள்ளத் தாக்கல்லோ இது
தண்ணீரில்லாப் பாலையன்றோ
கண்ணீரை மாற்றியே சந்தோசம் பொங்கிடும்
தண்ணீர் தடாகமாய் மாற்றுவார் – நான்

பாடுகள் சகித்த இயேசு
நடந்த பாதை இதல்லோ
ஓடியே வீரனாம் இயேசுவை நோக்கியே
பாடுவேன் நம்பிக்கையுடனே – நான்

மண் வாழ்வின் இன்பம் வெறுத்தேன் – மேல்
விண் வாழ்வின் இன்பத்தைக் கண்டே
துன்பங்கள் மூலமாய் சுத்தரானோருடன்
பொன் நகரம் சேர்ந்து வாழுவேன் – நான்

ஆதரவாய் இடை கட்டி என்னை
ஆனந்தமா யோடச் செய்தார்
ஆவி அச்சாரத்தால் புத்திர சுவிகாரம்
ஆளுகையும் அன்று பெறுவேன் – நான்

எக்காள கீதம் முழங்க – சபை
எங்கும் துதிகளைச் சாற்ற
எங்களின் மன்னவன் மங்கிடா நீதியின்
செங்கோலும் ஓங்குமே நித்தியமாய் – நான்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS