Naathaa Um Thirukkaraththil | நாதா உம் திருக்கரத்தில்

நாதா உம் திருக்கரத்தில் இசைக் கருவி நான்
நாள்தோறும் பயன்படுத்தும் உந்தன் சித்தம் போல்

ஐயா உம் பாதம் என் தஞ்சமே
அனுதினம் ஓடி வந்தேன்
ஆனந்தமே அதிசயமே     – 2

எங்கே நான் போக உம சித்தமோ
அங்கே நான் சென்றிடுவேன்
உம நாமத்தில் ஜெயம் எடுப்பேன்  – நான்

புதுப்பாடல் தந்து ஆசீர்வதியும்
பரவசமாகிடுவேன்
எக்காளம் நான் ஊதிடுவேன்

நிந்தைகள் நெருக்கம் துன்பங்களில்
துதி பாடி மகிழ்ந்திருப்பேன்
கிருபை ஒன்றே போதுமைய்யா

ஊரெல்லாம் செல்வேன் பறை சாற்றுவேன்
உம நாமம் உயர்த்திடுவேன்
சாத்தான் கோட்டை தகர்த்திடுவேன்

Close Menu
error: Content is protected !!