To Advertise Contact - christmusicindia@gmail.com

Naesarae Um Thirupaatham | நேசரே உம் திருபாதம்

Loading

நேசரே உம் திருபாதம் அமர்ந்தேன்
நிம்மதியே நிம்மதியே
ஆர்வமுடனே பாடித் துதிப்பேன்
ஆனந்தம் ஆனந்தமே

அடைக்கலமே அதிசயமே
ஆராதனை ஆராதனை

உம் வல்ல செயல்கள் நினைத்து நினைத்து
உள்ளமே பொங்குதய்யா
நல்லவரே நன்மை செய்தவரே
நன்றி நன்றி ஐயா

வல்லவரே நல்லவரே
ஆராதனை ஆராதனை

பலியான செம்மறி பாவங்களெல்லாம்
சுமந்து தீர்த்தவரே
பரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோ
பாக்கியம் பாக்கியமே

பரிசுத்தரே படைத்தவரே
ஆராதனை ஆராதனை

எத்தனை இன்னல்கள் என் வாழ்வில் வந்தாலும்
உம்மை பிரியேன் ஐயா
இரத்தமே சிந்தி சாட்சியாய் வாழ்வேன்
நிச்சயம் நிச்சயமே

இரட்சகரே இயேசு நாதா
ஆராதனை ஆராதனை

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS