To Advertise Contact - christmusicindia@gmail.com

Namakkoru Thagappan Undu | நமக்கொரு தகப்பன் உண்டு

Loading

நமக்கொரு தகப்பன் உண்டு
அவரே நம் தெய்வம்
எல்லாமே அவரிலிருந்து வந்தன
நாமோ அவருக்காக வாழ்ந்திடுவோம்

திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பன் இவர்
தேவைகளை அறிந்த நல்ல தந்தை இவர்
உணவு ஊட்டுகிறார் உடையும் உடுத்துகிறார்

அப்பா… அப்பா…. தகப்பனே
என்று கூப்பிடுவோம்

ஆட்கொண்டு நடத்துகிறார் அதிசயமாய்
உருவாக்கி மகிழ்கின்றார் ஒவ்வொரு நாளும்
கேட்பதை கொடுத்திடுவார் தட்டும்போது திறந்திடுவார்

இரக்கம் நிறைந்த தந்தை அவர்
ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று அவர்
கணவனை இழந்தவர்க்கு காப்பாளர் அவர் தானே

குழந்தையாய் இருக்கும் போதே நேசித்தவர்
எகிப்தில் இருந்து என்னை அழைத்துக்கொண்டார்
கரங்கள் பிடித்துக் கொண்டு நடக்கப் பழக்குகிறார்

அன்புகரங்களால் அணைத்துக் கொண்டார்
பரிவு என்னும் கயிறுகளால் பிணைத்துக் கொண்டார்
நுகத்தை அகற்றிவிட்டார் ஜெயத்தை தந்துவிட்டார்

(இதே பாடலை இதே இராகத்தில் ஆராதனைப்
பாடலாக பின்வருமாறு பாடலாம்)

எங்கள் தகப்பனே எங்கள் தந்தையே
எல்லாமே உம்மிடம் இருந்து வந்தன
எந்நாளும் உமக்குதானே ஆராதனை

இரக்கம் நிறைந்த தந்தை நீரே
ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று நீரே
கணவனை இழந்தவர்க்கு காப்பாளர் நீர்தானய்யா

அப்பா… அப்பா…. தகப்பனே நன்றி ஐயா

குழந்தையாய் இருந்தபோதே நேசித்தீரே
எகிப்தில் இருந்து என்னை அழைத்துக் கொண்டீர்
கரங்கள் பிடித்துக் கொண்டு நடக்கப் பழக்குகிறீர்

திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பன் நீரே
தேவைகளை அறிந்த நல்ல தந்தை நீரே
உணவு ஊட்டுகிறீர் உடையும் உடுத்துகிறீர்

ஆட்கொண்டு நடத்துகிறீர் அதிசயமாய்
உருவாக்கி மகிழ்கின்றீர் ஒவ்வொரு நாளும்
கேட்பதை கொடுத்திடுவீர் தட்டும்போது திறந்திடுவீர்

அன்புகரங்களால் அணைத்துக் கொண்டீர்
பரிவு என்னும் கயிறுகளால் பிணைத்துக் கொண்டீர்
நுகத்தை அகற்றிவிட்டீர் ஜெயத்தை தந்துவிட்டீர்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS