Nambikkaikku | நம்பிக்கைக்கு

Loading

நம்பிக்கைக்கு உரியவரே
நம்பிவந்தேன் உம்சமூகம்
நம்புகிறேன் உம் வசனம்

சொந்த ஆற்றலை நம்பவில்லை
தந்தை உம்மையே சார்ந்துவிட்டேன்
வாக்குத்தத்தம் செய்தவரே
வாழ்க்கையெல்லாம் உம் வார்த்தைதானே

பாதைக்கு தீபம் பேதைக்கு வெளிச்சம்
உந்தன் வசனமே; ஆற்றல் மிக்கது ஜீவனுள்ளது
உந்தன் அருள்வாக்கு

உம்மை நம்புகின்ற மனிதர்களை
உமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும்
உள்ளமெல்லாம் மகிழுதைய்யா
உம் வசனம் நம்புவதால்

தீமை அனைத்தையும் விட்டு விலகி
உமக்கு அஞ்சிநான் நடந்து கொண்டால்
எலும்புகள் உரம்பெறும்
என் உடலும் நலம் பெறும்

புயலின் நடுவிலே பக்தன் பவுல்
வார்த்தை வந்ததால் திடன்கொண்டார்
கைதியாக கப்பல் ஏறி
கேப்டனாக செயல்பட்டார்

வார்த்தை நம்பியதால் வலைகள் வீசி
திரளாய் பேதுரு மீன்கள் பிடித்தார்
உம் வலையில் பிடிபட்டார்
தலைவனாக செயல்பட்டார்

உமது வார்த்தைகள் கைக்கொண்டு
உமக்கு உகந்தவற்றை செய்துவந்தால்
கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன்
ஊற்று நீராய் பொங்கிடுவேன்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS