To Advertise Contact - christmusicindia@gmail.com

Nanae Vazhi | நானே வழி

Loading

நானே வழி நானே சத்தியம்
நானே ஜீவன் மகனே (ளே) – உனக்கு
என்னாலன்றி உனக்கு விடுதலை இல்லை
என்னாலன்றி உனக்கு நிம்மதி இல்லை

நான் தருவேன் உனக்கு சமாதானம்
நான் தருவேன் உனக்கு சந்தோஷம்
கலங்காதே என் மகனே
கண்மணி போல் உன்னைக் காத்திடுவேன்

உனக்காக சிலுவையில் நான் மரித்தேன்
உனக்காக திரு இரத்தம் நான் சிந்தினேன்
என் மகனே வருவாயா
இதயத்திலே இடம் தருவாயா

உனக்காகவே நான் ஜீவிக்கின்றேன்
உன் உள்ளத்தில் வாழ துடிக்கின்றேன்
வருவாயா என் மகனே
இதயத்திலே இடம் தருவாயா

நீ நம்பும் மனிதர் கைவிடலாம்
ஆனால் நான் ஒரு போதும் கைவிட மாட்டேன்
கலங்காதே என் மகனே
கண்மணி போல் உன்னைக் காத்திடுவேன்

(இதே பாடலை இதே இராகத்தில் ஆராதனைப் பாடல்கள் பின்வருமாறு பாடலாம்)

நீரே வழி நீரே சத்தியம்
நீரே ஜீவன் இயேசையா

உம்மாலன்றி எனக்கு விடுதலை இல்லை
உம்மாலன்றி எனக்கு நிம்மதி இல்லை

நாம் நம்பும் மனிதர் கைவிடலாம்
ஆனால் நீர் ஒரு போதும் கைவிட மாட்டீர்

எனக்காகவே ஜீவிக்கின்றீர்
என் உள்ளத்தில் தங்கி நடத்துகிறீர்

எனக்காக சிலுவையில் நீர் மரித்தீர்
எனக்காக திரு இரத்தம் நீர் சிந்தினீர்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS