To Advertise Contact - christmusicindia@gmail.com

Nandrippalibeedam | நன்றிப்பலிபீடம்

Loading

நன்றிப்பலிபீடம் கட்டுவோம்
நல்ல தெய்வம் நன்மை செய்தார்
செய்த நன்மை ஆயிரங்கள்
சொல்லிச் சொல்லி பாடுவேன்

நன்றி தகப்பனே நன்மை செய்தீரே

ஜீவன் தந்து நீர் அன்புகூர்ந்தீர்
பாவம் நீங்கிட கழுவி விட்டீர்
உமக்கென்று வாழ பிரித்தெடுத்து
உமது ஊழியம் செய்ய வைத்தீர்

சிறந்த முறையிலே குரல் எழுப்பும்
சிலுவை இரத்தம் நீர் சிந்தினீரே
இரத்தக் கோட்டைக்குள் வைத்துக் கொண்டு
எதிரி நுழையாமல் காத்துக்கொண்டீர்

இருளின் அதிகாரம் அகற்றிவிட்டீர்
இயேசு அரசுக்குள் சேர்த்துவிட்டீர்
உமக்கு சொந்தமாய் வாங்கிக் கொண்டு
உரிமைச் சொத்தாக வைத்துக் கொண்டீர்

புதிய உடன்பாட்டின் அடையாளமாய்
புனித இரத்தம் ஊற்றினீரே
சத்திய ஜீவ வார்த்தையாலே
மரித்த வாழ்வையே மாற்றினீரே

எதிராய் வாழ்ந்து வந்த இவ்வுலகை
ஒப்புரவக்கினீர் உம் இரத்தத்தால்
தூரம் வாழ்ந்து வந்த எங்களையே
அருகில் கொண்டுவந்தீர் ஆவியினால்

குற்றம் செய்ததால் மரித்திருந்தோம்
இயேசுவோடே கூட எழசசெய்தீர்
கிருபையினாலே இரட்சித்தீரே
உன்னதங்களிலே உட்காரச் செய்தீர்

பார்க்கும் கண்களை தந்தீரய்யா
பாடும் உதடுகள் தந்தீரய்யா
உழைக்கும் கரங்களை தந்தீரய்யா
ஓடும் கால்களை தந்தீரய்யா

இதய பெலவீனம் நீக்கினீரே
சுகர் வியாதிகள் போக்கினீரே
அல்சர் இல்லாமல் காத்தீரே
ஆஸ்மா முற்றிலும் நீங்கியதே

நல்ல குடும்பம் நீர் தந்தீரய்யா
செல்ல பிள்ளைகள் தந்தீரய்யா
அணைக்கும் கணவனை தந்தீரய்யா
அன்பு மனைவியை தந்தீரய்யா

இருக்க நல்ல ஒரு வீடு தந்தீர்
வாழத் தேவையான வசதி தந்தீர்
கடுமையாக தினம் உழைக்க வைத்தீர்
கடனே இல்லாமல் வாழ வைத்தீர்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS