Nandriyaal Thuthipaadu | நன்றியால் துதிபாடு

நன்றியால் துதிபாடு – நம் இயேசுவை
நாவாலே என்றும் பாடு
வல்லவர் நல்லவர் போதுமானவர்
வார்த்தையில் உண்மையுள்ளவர் – நன்றி

எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
இயேசு உந்தன் முன்னே செல்கிறார்
கலங்கிடாதே திகைத்திடாதே
துதியினால் இடிந்து விழும்

செங்கடல் நம்மைச் சூழ்ந்து கொண்டாலும்
சிலுவையின் நிழலுண்டு
பாடிடுவோம் துதித்திடுவோம்
பாதைகள் கிடைத்துவிடும்

கோலியாத் நம்மை எதிர்த்து வந்தாலும்
கொஞ்சமும் பயம் வேண்டாம்
இயேசு என்னும் நாமம் உண்டு
இன்றே ஜெயித்திடுவோம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS