Nandriyinaale Nam Ullame | நன்றியினாலே நம் உள்ளமே

நன்றியினாலே நம் உள்ளமே
நிறைந்தே பாடிடுவோம்
எண்ணிலடங்கா நன்மைகட்காய்
நாதனைப் போற்றிடுவோம்

பல்லவி
அல்லேலூயா கீதம் பாடிடுவோம்
தற்பரன் இயேசுவையே
ஆர்ப்பரித்தே நாம் மகிழ்வோம்
அற்புத தேவனையே

கடந்ததான நாட்களிலே
கருத்தாய் காத்தனரே
காப்போர் உன்னை கண்மணிபோல்
என்றதாம் வாக்குரைத்தே – அல்லேலூயா

மாராவைப் போன்ற கசந்ததாம்
கோரங்களில் நடுவே
தேனிலும் இனிய வாக்குகளால்
தேற்றினார் நம் தேவனே – அல்லேலூயா

சோர்ந்திடும் நேரம் தாங்கிடும் உம்
வல்லமையின் கரமே
செட்டைகளின் நிழல்களிலே
மறந்தே நாம் ஜீவிப்போம் – அல்லேலூயா

யோர்தானைப் போன்ற துன்பங்களை
தாங்கினோம் உம் பெலத்தால்
நமக்கெதிராய் ஓராயுதம்
என்றென்றும் வாய்த்திடாதே – அல்லேலூயா

காடான பாதை நாம் செல்கையில்
கலங்கரை விளக்காய்
இம்மானுவேல் நம்மொடிருந்த
என்றென்றும் காத்திடுவார் – அல்லேலூயா

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS