Nanmaiyum Kirubaiyum – | Kingdom Community | ft. Kharis Anugraha & Isaac D | – Lyrics

1) நன்மைகளின் தேவனே, இரக்கத்தில் ஐஸ்வர்யரே,
உம் செய்கைகளோ, ஏராளமே;
கிருபைகளின் தேவனே, உம் வழிகள் அதிசயமே
உம் திட்டங்களோ மிக உயர்ந்ததே.

உம் நன்மையினால் என்னை திருப்தியாக்கி,
உம் கிரியைகளால் என்னை மகிழ செய்தீர்,
என் விருப்பங்கள் எல்லாம் நீர் நிறைவேற்றியே,
என் நாவை உம் துதிகளைப் பாட செய்தீர்;

நன்மையும், கிருபையும் என்னைத் தொடருதே,
என்னைத் தொடருதே, என்னைத் தொடருதே,
நன்மையும், கிருபையும் என்னைத் தொடருதே
ஜீவ நாளெல்லாம், என்னைத் தொடருதே.

2) பெருக செய்யும் தேவனே, உம் மகிமையின் ஐஸ்வர்யத்தால்,
என் குறைவுகளை நிறைவாக்கினீர்;
ஆவியான தேவனே, ஆற்றலை தருபவரே,
செல்வங்களை சுதந்திரிக்கவே….. (உம் நன்மையினால்)

உம் நன்மையினால் என்னை திருப்தியாக்கி,
உம் கிரியைகளால் என்னை மகிழ செய்தீர்,
என் விருப்பங்கள் எல்லாம் நீர் நிறைவேற்றியே,
என் நாவை உம் துதிகளைப் பாட செய்தீர்;

நன்மையும், கிருபையும் என்னைத் தொடருதே,
என்னைத் தொடருதே, என்னைத் தொடருதே,
நன்மையும், கிருபையும் என்னைத் தொடருதே
ஜீவ நாளெல்லாம், என்னைத் தொடருதே.

3) நீர் கால்களின் ஓரத்தில், எலை உதிர மரம் போல் இருப்பேன்,
வளர்ந்து கனிகள் தந்து, எப்போதும் செழித்திருப்பேன்;
நான் வாழ்கின்ற தேசத்தில், வருத்தம் இன்றி நன்மை கண்டிடுவேன்,
நான் செய்வதெல்லாம் வாய்க்குமே.

நன்மையும், கிருபையும் என்னைத் தொடருதே,
என்னைத் தொடருதே, என்னைத் தொடருதே,
நன்மையும், கிருபையும் என்னைத் தொடருதே
ஜீவ நாளெல்லாம், என்னைத் தொடருதே -(2)

என்றென்றும், என்றென்றும்,
நன்மையும் கிருபையும் என்னைத் தொடருதே;
ஒவ்வாரு நாளெல்லாம்,
உம் நன்மை தொடருதே,
என்னைத் தொடருதே, தொடருதே,
இயேசுவே நீர் வல்லவர் என்றும் நல்லவர்

error: Content is protected !!
ADS
ADS
ADS