NANTRI YESUVAE | நன்றி இயேசுவே | JOHNSAM JOYSON – Lyrics

Loading

நன்றி இயேசுவே
நன்றி நன்றி இயேசுவே
அதிசயமாய் இதுவரையில் நடத்தி வந்தவரே
நன்றி நன்றி இயேசுவே

1.கால் தடுமாறாமல்
கண்ணீரில் மூழ்காமல்
கண்மணி போல் என்னை காத்துக்கொண்டீர்
இந்தநாள் வரையும் என்னை கொண்டு வந்தீர்
இன்னுமாய் கிருபை தந்து தாங்குகிறீர்

இம்மா நேசம் நீர் காண்பிக்க
என்னில் ஒன்றும் இல்லையே
உம் அன்புக்கினை இல்லையே

2.தீங்கொன்றும் அணுகாமல்
தீபம் அனணயாமல்
திருக்கரம் கொண்டென்னை ஆதரித்தீர்
என்னையா இவ்வளவாய் நீர் நேசித்தீர்
உண்மையாய் என் விளக்கை நீர் ஏற்றினீர்

இம்மா நேசம் நீர் காண்பிக்க
என்னில் ஒன்றும் இல்லையே
உம் அன்புக்கினை இல்லையே

error: Content is protected !!
ADS
ADS
ADS