To Advertise Contact - christmusicindia@gmail.com

Nenjame Veenaay | நெஞ்சமே வீணாய்

Loading

நெஞ்சமே வீணாய் சோர்ந்து போகாதே
தஞ்சம் இயேசு இருக்கையில் தளர்ந்து விடாதே

அனுபல்லவி
வஞ்சகன் வீசும் வலையில் விழாதே
பஞ்சகாயன் உன்னை பாதுகாப்பாரே

சோதனை பலவும் சூழ்ந்திடும் நேரம்
வேதனை விதம் விதம் வந்திடுங்காலம்
தீதனைத்தும் திருச்சிலுவையில் தொங்கும்
நாதனை நினைத்திடில் நாசமாய் போகும் – நெஞ்சமே

பெற்றவரும் பெண்டு பிள்ளைகளும் மிக
உற்றவரும் உயிர் தோழர்களானோரும்
பற்றற்றவராய்ப் பழகிடும் போதும்
மற்றவர் செய்கையால் மனங்கலங்காதே – நெஞ்சமே

கஷ்டங்கள் வருங்கால் களிப்பாக எண்ணு
இஷ்டமுடன் ஜெபம் எந்நேரம் பண்ணு
நஷ்டங்கள் வந்தாலும் நலமென்று சொல்லு
துஷ்டனின் சூட்சியை தூயநாள் வெல்லு – நெஞ்சமே

நியாயமில்லாமல் குற்றம் காண்போர்கள்
நியாயத் தீர்ப்பின் நாள் வெட்கங் கொள்வார்கள்
தூயவன் முன் உன் சிறு இருதயம்
மாயமும் மாசுமில்லானதால் போதும் – நெஞ்சமே

செய்ததும் சொன்னதும் இல்லென்று மறுப்பார்
செய்யாததும் சொல்லாததும் ஆம் என்று உரைப்பார்
பொய்யிலும் புரட்டிலும் புதைந்தது உலகம்
மெய்யுடை யான் இயேசு மீது வைபாரம் – நெஞ்சமே

இயேசுவின் சிந்தை இருந்திட வேண்டும்
இயேசுவின் ஆவியில் இயங்கிட வேண்டும்
இயேசுவைப் போல் எல்லாம் சகித்திட வேண்டும்
இயேசுவின் கிருபையைப் பெற்றிட வேண்டும் – நெஞ்சமே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS