To Advertise Contact - christmusicindia@gmail.com

Nigarae Illaatha Sarvaesaa | நிகரே இல்லாத சர்வேசா

Loading

நிகரே இல்லாத சர்வேசா
திகழும் ஒளி பிரகாசா

அனுபல்லவி
துதிபாடிட இயேசுநாதா
பதினாயிரம் நாவுகள் போதா

சரணங்கள்
துங்கன் இயேசு மெய் பரிசுத்தரே
எங்கள் தேவனை தரிசிக்கவே
துதிகளுடன் கவிகளுடன்
தூய தூயனை – நெருங்கிடுவோம் – நிகரே

கல்லும் மண்ணும் எம் கடவுளல்ல
கையின் சித்திரம் தெய்வமல்ல
ஆவியோடும் உண்மையோடும்
ஆதி தேவனை வணங்கிடுவோம் – நிகரே

பொன், பொருள்களும் அழிந்திடுமே
மண்ணும் மாயையும் மறைந்திடுமே
இதினும் விலை பெரும் பொருளே
இயேசு ஆண்டவர் திருவருளே – நிகரே

தேவ மைந்தனாய் அவதரித்தார்
பாவ சோதனை மடங்கடித்தார்
மனிதனுக்காய் உயிர்கொடுத்தார்
மாளும் மாந்தரை மீட்டெடுத்தார் – நிகரே

கொந்தளித்திடும் அலைகளையும்
கால் மிதித்திடும் கர்த்தரவர்
அடங்கிடுமே அதட்டிடவே
அக்கரை நாமும் சேர்ந்திடவே – நிகரே

ஜீவன் தந்தவர் மரித்தெழுந்தார்
ஜீவா தேவனே உயிர்த்தெழுந்தார்
மறுபடியும் வருவேனென்றார்
மா சந்தோஷ நாள் நெருங்கிடுதே – நிகரே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS