To Advertise Contact - christmusicindia@gmail.com

Nithiya Raajaa | நித்திய ராஜா

Loading

நித்திய ராஜா நிர்மல நாதா
நின் பாதம் பணிந்தேன் இக்காலை
நின் பாதம் பணிந்தேன் இவ்வேளை

பல்லவி
என் மன ராஜ்யத்தில் என்றும் அரசாளுகின்ற
இராஜாதி ராஜாவுக்கே ஸ்தோத்திரம்
இயேசு மகா ராஜாவுக்கே ஸ்தோத்திரம்

கண்ணயர்ந்த வேளையிலும் கண்ணிமைப் போல் காத்தாரே
கற்பகமே உமக்கு ஸ்தோத்திரம்
கண் விழித்த வேளையிலும் கண்மேல் உம் கண் வைத்து
கருத்தாய் போதித்தவா ஸ்தோத்திரம்

பிற்பகல் வேளையிலும் எப்பக்கம் சூழ்ந்து நிற்கும்
இம்மானு வேலனே ஸ்தோத்திரம்
உம்முடனே நான் இணைய என்னுடனே நீர் பிணைய
வாழ்ந்திடும் வாழ்வுக்காய் ஸ்தோத்திரம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS