To Advertise Contact - christmusicindia@gmail.com

Oo! Yesu Umathanbu | ஓ! யேசு உமதன்பு

Loading

பல்லவி

ஓ! யேசு உமதன்பு எவ்வளவு பெரியது
ஆகாயம் பூமி மலை ஆழிகளுக்கெல்லாம் பெரியது

அளவில்லா ஆனந்தத்தால் அகம் நிறைந்தது
ஆண்டவர் காரியங்கள் அதிகம் சிறந்தது
அன்றாடம் காலை மாலையிலும் துதிக்க உயர்ந்தது – ஓ! யேசு
துதிக்க உயர்ந்தது

சங்கட சமயங்களில் மங்கியே வாடுகிறேன்
துங்கனே இறங்குமென ஏங்கியே நாடுகிறேன்
பங்கமில்லாமல் பதிலளிப்பேன் என்றதால் பாடுகிறேன் – ஓ! யேசு

இருளாம் பள்ளத்தாக்கில் மருகியே நடந்தாலும்
அருமெந்தன் மேய்ப்பராய் அருகிலிருப்பதாலும்
கருணையா யென்னைக் கரம் பிடித்தே
கர்த்தரே காப்பதாலும் கர்த்தரே காப்பதாலும் – ஓ! யேசு

குறைவுள்ளோனானாலும் கூடவே இருக்கிறீர்
நிறையாம் புல் தரைகளில் மெதுவாகவே நடத்துகிறீர்
இறைவனாம் யேசு எல்லாவற்றிலும்
திருப்தியாக்குகிறீர், திருப்தியாக்குகிறீர் – ஓ! யேசு

தேவனுடைய வீட்டில் சித்தப்படி துதிப்பேன்
ஏசு இருதயத்துடனே என்றுமதை மதிப்பேன்
ஆராதிக்க அருகராம் யேசு அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா ஆமென் – ஓ! யேசு

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS