Ootruth Thanneerae | ஊற்றுத் தண்ணீரே

ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே
ஜீவ நதியே என்னில் பொங்கி பொங்கி வா
ஆசீர்வதியும் என் நேச கர்த்தரே
ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும்

கன்மலையைப் பிளந்து வனாந்தரத்திலே
கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே
பள்ளத்தாக்கிலும் மலைகளிலும்
தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே

ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தரே
ஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுமே
கனிதந்திட நான் செழித்தோங்கிட
கர்த்தரின் கரத்தால் நித்தம் கணம் பெற்றிட

இரட்சிப்பின் ஊற்றுக்கள் எந்தன் சபைதனிலே
எழும்பிட இந்த வேலை இரங்கிடுமே
ஆத்மா பலமும் பரிசுத்தமும்
ஆவலுடன் பெற்றிடவே வரம் தாருமே

திறக்கப்பட்டதாம் ஊற்று சிலுவையிலே
இரட்சகரின் காயங்களில் வெளிப்படுதே
பாவக் கறைகள் முற்றும் நீங்கிட
பரிசுத்த சமூகத்தில் ஜெயம் பெற்றிட

கிருபையின் ஊற்றுகள் பெருகிடவே
புதுபெலனடைந்து நான் மகிழ்ந்திடவே
பரிசுத்தத்தை பயத்துடனே
பூரணமாக்கிட தேவ பெலன் தாருமே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS