Oppukkoduththeer Aiyaa | ஒப்புக்கொடுத்தீர் ஐயா

Loading

ஒப்புக் கொடுத்தீர் ஐயா
உம்மையே எனக்காக
உலகின் இரட்சகரே
உன்னத பலியாக

எங்களை வாழ வைக்க
சிலுவையில் தொங்கினீர்
நோக்கிப் பார்த்ததினால்
பிழைத்துக் கொண்டோம் ஐயா

நித்தியா ஜீவன் பெற
நீதிமானாய் மாற
ஜீவன் தரும் கனியாய்
சிலுவையில் தொங்கினீர்

சுத்திகரித்தீரே
சொந்த ஜனமாக
உள்ளத்தில் வந்தீர் ஐயா
உமக்காய் வாழ்ந்திட

பாவத்திற்கு மரித்து
நீதிக்குப் பிழைத்திட
உம திரு உடலிலே
என் பாவம் சுமந்தீர் ஐயா

மீட்கும் பொருளாக
உம இரத்தம் தந்தீர் ஐயா
சாத்தானை தோற்கடித்து
சாவையும் வென்றீர் ஐயா

என்னையே தருகிறேன்
ஜீவபலியாக
உகந்த காணிக்கையாய்
உடலைத் தருகிறேன்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS