Oppuviththen Aiyane | ஒப்புவித்தேன் ஐயனே

Loading

ஒப்புவித்தேன் ஐயனே
உம் சித்தம் செய்ய தந்தேனே
முற்றிலுமாய் அர்ப்பணித்தேன்
ஏற்றுக் கொள்ளும் இயேசுவே

சுட்டெரிக்கும் அக்கினியால்
சுத்திகரித்தேம்மை மாற்றிடுமே
ஆவி ஆத்மா சரீரமே
ஆத்தும நேசரே படைக்கிறேன் – ஒப்புவித்தேன்

கண்ணீர் கவலை பெருகுதே
கர்த்தர் தம் வாக்காலே தேற்றிடுமே
உலக சிநேகம் பின்னே வைத்தே
உறுதியாக பின் சென்றிட – ஒப்புவித்தேன்

அத்திமரம் துளிர் விடாமல்
ஆஸ்திகள் யாவும் அழிந்திடினும்
கர்த்தர் தம் அன்பை விட்டு நீங்கா
தூய கிருபை தந்தருளும் – ஒப்புவித்தேன்

எந்தனின் சிந்தை முன்னறிவீர்
எந்தனின் பாதை நீர் அறிவீர்
நல்ல பாதை நடந்திட
நாதனே என்னையும் அர்ப்பணித்தேன் – ஒப்புவித்தேன்

காடுமலைகள் போன்ற இடம்
கண்டு என்றும் அஞ்சிடாமல்
அழியும் ஆத்ம தரிசனம்
ஆண்டவர் என்னிலே ஈந்தருளும் – ஒப்புவித்தேன்

சோதனை எம்மை சூழ்ந்திடினும்
சொர்ந்திடா உள்ளம் தந்தருளும்
ஜீவக்கிரீடம் முன்னே வைத்தே
ஜீவிய காலம் நடந்திட – ஒப்புவித்தேன்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS