To Advertise Contact - christmusicindia@gmail.com

Paadugiren Naan Paadugiren | பாடுகிறேன் நான் பாடுகிறேன்

Loading

பாடுகிறேன் நான் பாடுகிறேன்
இயேசென்னை நேசித்ததால்
அல்லேலூயா நான் பாடுகிறேன்
அவரென்னை இரட்சித்ததால்

எனக் கொன்று தேவை என்று உணர்ந்தேன்
என் உள்ளில் சமாதானம் இல்லை என்றறிந்தேன்
என் பாவத்தோடு நான் இயேசுவிடம் வந்தேன்
என் பாவம் மன்னித்தார் என்னென்று சொல்வேன்

பட்டம் பதவி பணமும் தராத
பரிசுத்த ஜீவியம் என் இயேசு தந்தார்
கேட்டிடு என் ஜீவ வார்த்தை என்றாரே
கீழ்ப் படிந்தேன் என் தன் உள்ளம் பொங்குதே

அதிகாலை தோறும் என் உள்ளத்தை அன்பால்
அதிகமதிகமாய் நிரப்பி வாராரே
தினந்தோறும் புதிதாக கிருபை அளித்து
தினந்தோறும் அதிசயம் காணச் செய்கின்றார்

நேசிக்கச் சிறந்தோர் இயேசென்றறிந்தேன்
வாசிக்கச் சிறந்த வோர் புத்தகம் பெற்றேன்
நேசித்து வாசித்துப் பாடி மகிழ்வேன்
நேசரின் அன்பை நான் உலகெங்கும் சொல்வேன்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS