பாடுவோம் மகிழ்வோம்
கொண்டாடுவோம்
அப்பா சமூகத்தில் பாடி
மகிழ்ந்து கொண்டாடுவோம்
அக்கினி மதில் நீரே
ஆறுதல் மழை நீரே
இக்கட்டில் துணை நீரே
இருளில் வெளிச்சம் நீரே – நன்றி
துயர்நீக்கும் மருத்துவரே
என் துதிக்குப் பாத்திரரே
பெலனெல்லாம் நீர்தானையா
என் பிரியமும் நீர்தானையா
கல்வாரி சிலுவையினால் – என்
சாபங்கள் உடைந்ததையா
ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் – இந்த
அடிமைக்கு கிடைத்ததையா
இயேசுவே உம் இரதத்ததால்
என்னை நீதிமானாய் மாற்றினீரே
பரிசுத்த ஆவி தந்து – உம்
அன்பை ஊற்றுனீரே
உம்மையே நம்பி வாழ்வதால்
உமக்கே சொந்தமானேன் – என்
உயிரான கிறிஸ்து வந்ததால் – உம்
உறவுக்குள் வந்துவிட்டேன்
இவ்வுலகப் போக்கின்படி
நான் வாழ்ந்தேன் பலநாட்கள்
உம்மோடு இணைத்தீரைய்யா – உம்
மிகுந்த இரக்கத்தினால்
வாழ்வு தரும் ஊற்று நீரே
வழிகாட்டும் தீபம் நீரே
புயலில் புகலிடமே – கடும்
வெயிலில் குளிர் நிழலே
பேரின்ப நீரோடையில்
என் தாகம் தணிப்பவரே
உமது பேரன்பு – அது
எத்தனை மேலானது