Pali Peedaththilennai | பலி பீடத்திலென்னை

பலி பீடத்திலென்னை பரனே
படிக்கிறேனே இந்த வேளை
அடியேனை திருச்சித்தம் போல
ஆண்டு நடத்திடுவீர்

கல்வாரியின் அன்பினையே
கண்டு விரைந்தோடி வந்தேன்
கழுவும் உம் திரு இரத்தத்தாலே
கரை நீங்க இருதயத்தை

நீரின்றி என்னாலே பாரில்
ஏதும் நான் செய்திட இயலேன்
சேர்ப்பீரே வழுவாது என்னை
காத்துமக்காய் நிறுத்தி – கல்வாரியின்

ஆவியோடாத்துமா சரீரம்
அன்பரே உமக்கேன்றும் தந்தேன்
ஆலயமாக்கியே இப்போ
ஆசீர் வதித்தருளும் – கல்வாரியின்

சுயமேன்னில் சாம்பலாய் மாற
சுத்தாவியே அனல் மூட்டும்
ஜெயம் பெற்று மாமிசம் சாக
தேவா அருள் செய்குவீர் – கல்வாரியின்

பொன்னையும் பொருளையும் விரும்பேன்
மண்ணின் வாழ்வையும் வெறுத்தேன்
மன்னவன் இயேசுவின் சாயல்
இந்நிலத்தே கண்டதால் – கல்வாரியின்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS