Pallangalellaam | பள்ளங்களெல்லாம்

Loading

பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்
மலைகள் குன்றுகள் தகர்ந்திட வேண்டும்
கோணலானவை நேராகணும்
கரடானவை சமமாகணும்

இராஜா வருகிறார் ஆயத்தமாவோம் (2)
இயேசு வருகிறார் எதிர் கொண்டு செல்வோம்

நல்ல கனிகொடா மரங்களெல்லாம்
வெட்டுண்டு அக்கினியில் போடப்படும்

கோதுமையைப் பிரித்து களஞ்சியத்தில் சேர்த்து
பதரையோ அக்கினியில் சுட்டெரிப்பாரே

அந்நாளில் வானம் வெந்து அழியும்
பூமியெல்லாம் எரிந்து உருகிப் போகும்

கரையில்லாமலே குற்றமில்லாமலே
கர்த்தருக்காய் வாழ்ந்து முன்னேறுவோம்

அநுதினமும் ஜெபத்தில் விழித்திருப்போம்
அபிஷேக எண்ணெயால் நிரம்பிடுவோம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS