Paralogame En Sonthame | பரலோகமே என் சொந்தமே

Loading

பரலோகமே என் சொந்தமே
என்று காண்பேனோ
என் இன்ப இயேசுவை என்று காண்பேனோ

வருத்தம் பசி தாகம்
மன துயரம் அங்கே இல்லை
வின் கிரீடம் வாஞ்சிப்பேன்
விண்ணவர் பாதம் சேர்வேன் – பரலோகமே

சிலுவையில் அறையுண்டேன்
இனி நானல்ல இயேசுவே
அவர் மகிமையே
எனது இலட்சியமே – பரலோகமே

இயேசு என் நம்பிக்கையாம்
இந்த பூமியும் சொந்தமல்ல
பரிசுத்த சிந்தையுடன்
இயேசுவை பின் பற்றுவேன் – பரலோகமே

ஓட்டத்தை ஜெயமுடன்
நானும் ஓடிட அருள் செய்வார்
விசுவாச பாதையில்
சோராது ஓடிடுவேன் – பரலோகமே

பரம சுகம் காண்பேன்
பரன் தேசம் அதில் சேர்வேன்
இரா பகல் இல்லையே
இரட்சகர் வெளிச்சமே – பரலோகமே

அழைப்பின் சத்தம் கேட்டு
நானும் ஆயத்தமாகிடுவேன்
நாட்களும் நெருங்குதே
வாஞ்சையும் பெருகுதே – பரலோகமே

பளிங்கு நதியோரம்
சுத்தர் தாகம் தீர்த்திடுவார்
தூதர்கள் பாடிட
தூயனை தரிசிப்பேன் – பரலோகமே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS