Paralogaththin Pithaave | பரலோகத்தின் பிதாவே

Loading

பரலோகத்தின் பிதாவே
உமது நாமமே பரிசுத்தப்படுவதாக
உம இராஜ்யம் வருவதாக (2)

உமது சித்தம் பரத்தில்
செய்யப்படுவது போல
பூமியிலேயும் அதுவே செய்யப்படுவதாக – பரலோகத்தின்

அன்றன்று வேண்டிய அப்பம்
இன்றும் எங்கட்கு தாரும்
ஜீவ அப்பம் நீரே
அதுவே எங்கட்கு போதும் – பரலோகத்தின்

எங்கள் கடனாட்களை
நாங்கள் மன்னிப்பதுபோல
எங்கள் கடன்களையெல்லாம்
தயவாய் மன்னியும் தேவா – பரலோகத்தின்

எங்களை தீமையினின்றும்
எல்லா சோதனையினின்றும்
என்றுமே இரட்சித்துக் கொள்ளும்
எங்கள் இரட்சகன் நீரே – பரலோகத்தின்

கனமும் மகிமையும்
இராஜ்யமும் வல்லமையும்
என்றென்றும் உம்முடையதே ஆமென் (2) – பரலோகத்தின்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS