Parama Erusalaemae | பரம எருசலேமே

பரம எருசலேமே பரலோகம் வீட்டிறங்குதே
அலங்கார மண வாட்டியாய் அழகாக ஜொலித்திடுதே

சரணங்கள்
ஆமென் அல்லேலூயா – (4)

எருசலேமே கோழி தன குஞ்சுகளை
ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன்
தாய்ப் பறவை துடித்திடும் பாசம் கண்டேன்
தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் – கனிவான எருசலேமே

ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன்
சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன்
நீதி தேவன் நிழலடி சீரம் புதைத்தேன்
நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன் – மேலான எருசலேமே

சர்வ சங்க சபையின் அங்கமானேன்
சர்வ லோக நடுவரின் அருகில் வந்தேன்
பரிந்துரைக்கும் இரத்தத்தில் மூழ்கி நின்றேன்
பரிவாரமாய் தூதர்கள் ஆடி நின்றார் – ஆஹா என் எருசலேமே

விடுதலையே விடுதலை விடுதலையே
லோகமத்தின் மோகத்தில் விடுதலையே
நானேயெனும் சுயவாழ்வில் விடுதலையே
நாதர் தனில் வாழ்வதால் விடுதலையே – சுயாதீன எருசலேமே

கண்ணீர் யாவும் கனிவோடு துடைத்திடுவார்
என்னமத்தின் ஏக்கங்கள் தீர்த்திடுவார்
மரணமில்லை மன நோயின் துயரமில்லை
அறைலில்லை அழுகையின் சோகமில்லை – தலை நகராம் எருசலேமே