Parisuththa Devan Neere | பரிசுத்த தேவன் நீரே

பரிசுத்த தேவன் நீரே
வல்லமை தேவன் நீரே
என்றென்றும் தொழுதிடுவோம் நாம்
இயேசுவே உம நாமத்தை
என்றென்றும் தொழுதிடுவோம் நாம்
நீர் தேவன் நீர் இராஜா என்றும்

கேருபீன் சேராபீன்கள்
உந்தனை தொழுதிடுதே
வல்லமை இறங்கிடவே
உந்தனை தொழுதிடுவோம் – பரிசுத்த

உம்மை போல் தேவன் இல்லை
பூமியில் பணிந்திடவே
அற்புத தேவன் நீரே
என்றென்றும் தொழுதிடுவோம் – பரிசுத்த

மேலான தேவன் நீரே
மேலான நாமமிதே
மாந்தர்கள் பணிகின்றாரே
உம்மையே தொழுதிடுவோம் – பரிசுத்த

சத்திய பாதைகளில்
நித்தமும் நடந்திடவே
உத்தமர் தேவன் நீரே
உம்மையே தொழுதிடுவோம் – பரிசுத்த

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS