fbpx

Parisuththaavi Engal Meethile | பரிசுத்தாவி எங்கள் மீதிலே

பரிசுத்தாவி எங்கள் மீதிலே
பொழியும் இந்த வேளையிலே
பிரசன்னத்தால் நிரப்பி எம்மை
புது சக்தியை அளித்திடுமே

இம்மண்டலம் முழுவதையும்
உம் ஆவியால் நிரப்பி விடும்
அனுப்பியே தாரும் – பரிசுத்த அக்கினி
அந்தகாரத்தை நீக்கிவிடும் – பரிசுத்தாவி

தேவ செய்தி அளிக்க விருக்கும்
தேவ பிள்ளையைப் பெலப்படுத்தும்
தேவலோகத்தின் – இரகசியங்களை
தேவா எங்கட்கும் வெளிப்படுத்தும் – பரிசுத்தாவி

பேயின் சக்தி தகர்ந்திடவே
நோயின் சாபம் அகற்றிடவே
வல்லமை தாரும் – பெலமும் அருளும்
வரம் தந்தெம்மை அபிஷேகியும் – பரிசுத்தாவி

பரலோகத்தின் அதிபதியே
பரலோகத்தின் பல கனிகள்
திறந்தே கொட்டியும் – கிருபை சொரியும்
திருப்திப் படுத்தி அனுப்பும் – பரிசுத்தாவி

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS