Parisuththamaana Parane | பரிசுத்தமான பரனே

Loading

பரிசுத்தமான பரனே என்னை
பாத்திரன் ஆக்கிடுமே
பரம தரிசனம் தாருமே தேவா
பரிசுத்தமாக்கிடுமே

கர்த்தருக்கு பரிசுத்தம்
கருத்துடன் நெற்றியிலே
பதித்திட உதவி செய்யும்
பரமனே சுத்தமாக்கும்

அந்தரங்க வாழ்க்கையில் பரிசுத்தம் காண
அடிமைக்கு உதவி செய்யும்
ரகசிய பாவங்கள் வெறுத்திட எனக்கு
இறங்கிடுமே இந்நேரமே

பொது வாழ்வில் என்னை பரிசுத்தமாக்க
காத்திட உதவி செய்யும்
நாள்தோறும் என் வாழ்வில் உம்மையே உயர்த்த
பரிசுத்தம் தந்திடுமே

தூசியை உதறி விட்டெழுந்திட எனக்கு
தூயனே துணை செய்வீர்
வல்லமை தரித்து வாழ்ந்திட இன்று
உம் ஆவி தந்திடுமே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS