Parisuththamae Paran | பரிசுத்தமே பரன்

பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம்
பக்தர்கள் தேடும் தேவாலயம்

கர்த்தர் மலைமேல் ஏறிச்சென்று
நிற்கக் கூடியவன் யார்?
மாசற்ற செயல் தூய உள்ளம்
உடைய மனிதனே

நாமெல்லாம் பரிசுத்தராவதே
தெய்வத்தின் திருச்சித்தம்
பரிசுத்தமின்றி தெய்வத்தை யாரும்
தரிசிக்க முடியாது

பரிசுத்தரென்றே ஓய்வின்றிப் பாடும்
பரலோக கூட்டத்தோடு
வெண்ணாடை அணிந்து குருத்தோலை ஏந்தி
எந்நாளும் பாடுவேன் – 2

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS