To Advertise Contact - christmusicindia@gmail.com

Perinba Nathiye | பேரின்ப நதியே

Loading

பேரின்ப நதியே தாகத்தைத் தீர்த்திட
பின்மாரியாக பொழிந்திடுமே

எலியாவின் தேவன் எங்கே என்றானே
சலியாமல் ஓடி சால்வை பெற்றானே
பரலோக ராஜ்யம் பரிசுத்தவான்கள்
பலவந்த மாக்கும் காலம் இதுவே

மங்கும் திரிகள் நெரிந்த நாணல்
தேங்கும் தண்ணீர்கள் போன்ற அநேகர்
அனலுமில்லாத குளிருமில்லாத
அனுபவத்தோடே ஜீவிக்கின்றாரே

சவுலைப்பவுலாய் மாற்றிடும் தேவா
சடுதி ஒளியால் சந்திக்கும் மூவா
உலரும் எழும்பும் உயிரை அடையும்
உயிர் மீட்சி தாரும் என் இயேசு நாதா

பரிசுத்த ஆவிபெற்றிட வாரீர்
பரிசுத்த தேவ அழைப்பை பாரீர்
தேடுங்கள் கிடைக்கும் கேளுங்கள் தருவேன்
தட்டுங்கள் திறப்பேன் என்றுரைத்தாரே

ஊனர் குருடர் தீரா நோயாளர்
ஊமை செவிடர் பேயால் வாடுவோர்
அற்புத செயலால் ஆரோக்கியமடைய
ஆண்டவரிடமே வேண்டிடுவோமே

சத்திய பரனை பக்தியுடனே
நித்திய யுகமாய்ப் பாடிடுவேனே
ஏதேனில் ஜீவ ஊற்றுகளருகே
ஏழை என் தாகம் தீர்த்திடுவேனே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS