fbpx

Pilavunda Malaiye | பிளவுண்ட மலையே

Loading

பிளவுண்ட மலையே
புகலிடம் தாருமே
பக்கம் பட்ட காயமும்
பாய்ந்த செந்நீர் வெள்ளமும்
பாவதோஷம் யாவையும்
நீக்கும் படி அருளும்

எந்த கிரியை செய்துமே
எந்தன் நீதி கிட்டாதே
கண்ணீர் நித்தம் சொரிந்தும்
கஷ்ட தவம் புரிந்தும்
பாவம் நீங்க மாட்டாதே
நீரே மீட்பர் இயேசுவே

யாது மற்ற ஏழை நான்
நாதியற்ற நீசன் நான்
உம் சிலுவை தஞ்சமே
உந்தன் நீதி ஆடையே
தூய ஊற்றி அண்டினேன்
தூய்மையாகேல் மாளுவேன்

நிழல் போன்ற வாழ்விலே
கண்ணை மூடும் சாலிலே
கண்ணுக் கெட்டா லோகத்தில்
தடுத்தீர்வை தினத்தில்
பிளவுண்ட மலையே
புகலிடம் ஈயுமே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS