To Advertise Contact - christmusicindia@gmail.com

Piraananaathan Ennil | பிராணநாதன் என்னில்

Loading

பிராண நாதா என்னில் வைத்ததாம் அன்பினை
தியானிக்கும் போதெல்லாம் கண்ணீர் பெருகுதே
அன்பின் சொரூபனாய் ஆருயிர் நேசனாய்
நீச தூசி என்னை நேசிக்கலானிரே

பல்லவி
என் இயேசுவே நான் உம்முடையவன்
நீர் என் சொந்தம் என்றென்றுமாய்
ஆவி ஆத்மா சரீரம் பலியாய்
படைத்திட்டேன் ஏற்றுக் கொள்வீர்

தாயின் வயிற்றினில் பிரித்ததாம் நாள் முதல்
பற்பல பாதையில் பரிவுடன் காத்தீரே
வஞ்சக சாத்தானின் சூழ்ச்சியினின்றுமே
பறித்திழுத்தெந்தனை உம் சொந்தமாக்கினீர்

குயவனின் கையிலே களிமண்ணைப் போலவே
என்னை உம் கையிலே வைத்திட்டேன் நாயகா
என் சொந்த இஷ்டமோ ஏதும் வேண்டாம் நாதா
உம் நோக்கம் என்னிலே பூரணமாகட்டும்

நேசர் கரத்தினில் தீமை ஏதுமுண்டோ
யாதும் என் நன்மைக்கே என்பதை அறிகுவேன்
ஜூவாலிக்கும் அக்கினியோ பெருக்கான வெள்ளமோ
பட்சிக்க விட்டிடீர் அமிழ்த்தவும் பார்த்திடீர்

என்னையும் எந்தனுக்குள்ளதாம் யாவையும்
நேசர் கரத்தினில் முற்றுமாய் வைத்திட்டேன்
ஜீவனோ மரணமோ பிராண நாதன் என்னில்
வாஞ்சிப்பதெதுவோ சம்பூரணமாகட்டும்

மரண இருள் பள்ளம் தாண்டியும் நேரத்தில்
இயேசு என் நேசரின் கரமதைக் காண்பதால்
மகிழ்வுடன் ஏகுவேன் அக்கறை யோர்தானில்
நித்தியம் நித்தியம் ஆனந்தம் கொள்ளுவேன்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS