To Advertise Contact - christmusicindia@gmail.com

Poraadum En Nenjamae | போராடும் என் நெஞ்சமே

Loading

போராடும் என் நெஞ்சமே
புகலிடம் மறந்தாயோ
பாராளும் இயேசு உண்டு
பதறாதே மனமே

அலைகடல் நடுவினிலே
அமிழ்ந்து போகின்றாயோ
கரம்நீட்டும் இயேசுவைப் பார்
கரை சேர்க்கும் துணை அவரே

ஆ… ஆனந்தம் பேரானந்தம்
என் அருள்நாதர் சமூகத்திலே (2)

கடந்ததை நினைத்து தினம்
கண்ணீர் வடிக்கின்றாயோ
நடந்ததெல்லாம் நன்மைக்கே
நன்றி… நன்றி… சொல்லு – ஆ ….  ஆனந்தம்

வருங்கால பயங்களெல்லாம்
வாட்டுதோ அனுதினமும்
அருள்நாதர் இயேசுவிடம்
அனைத்தையும் கொடுத்துவிடு

நண்பன் கைவிட்டானோ
நம்பினோர் எதிர்த்தனரோ
கைவிடா நம் தேவனின்
கரம் பற்றி நடந்திடு

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS