Potriduvom Pugazhnthiduvom | போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம்

Loading

போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம்
போர்பரன் இயேசுவையே
புவியில் அவர் போல் வேறில்லையே

தந்தையைப்போல் தோளினிலே
மைந்தரெமைச் சுமந்தவரே
எந்நாளுமே அவர் நாமமே
இந்நிலத்தே நான் துதித்திடுவோம் – போற்றிடுவோம்

காண மகிமை புகழடைய
கருணையால் ஜெநிப்பித்ததாலே
கனலெரியின் சோதனையில்
கலந்கிடுமோ எம் விசுவாசமே – போற்றிடுவோம்

ஞாலமெல்லாம் கண்டதிசயிக்க
ஆவியின் அபிஷேகத்தாலே
ஏக சரீரமாய் நிறுத்த
இணைத்தனரே நம்மைத்தான் சுதராய் – போற்றிடுவோம்

ஆதி அப்போஸ்தல தூதுகளால்
அடியாரை ஸ்திரப்படுத்தி
சேதமில்லா ஜெயமளித்தே
கிறிஸ்துவின் நற்கந்தமாக்கினாரே – போற்றிடுவோம்

சீயோனே மாசாலேம் நகரே
சீரடைந்தே திகழ்வாயே
சேவிப்பாயே உன் நேசரையே
சிறப்புடனே இப்பார்தலத்தை – போற்றிடுவோம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS