To Advertise Contact - christmusicindia@gmail.com

Puthiya Paadal | புதிய பாடல்

Loading

புதிய பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்
புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்

கழுவினார் இரத்தத்தாலே
சுகம் தந்தார் காயத்தாலே
தேற்றினார் வசனத்தாலே
திடன் தந்தார் ஆவியாலே  – எனக்கு

உறுதியாய் பற்றிக் கொண்டோம்
உம்மையே நம்பி உள்ளோம்
பூரண சமாதானம்
புவிதனில் தருபவரே  – தினமும்

அதிசயமானவரே
ஆலோசனைக் கர்த்தரே
வல்லமையுள்ள தேவா
வரங்களின் மன்னவனே – எல்லா

கூப்பிட்டேன் பதில் வந்தது
குறைவெல்லாம் நிறைவானது
மகிமையின் ராஜா அவர்
மகத்துவமானவரே – இயேசு

மாலையில் அழுகை என்றால்
காலையில் அக்களிப்பு
கோபமோ ஒரு நிமிடம்
கிருபையோ நித்தம் நித்தம் – அவர்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS