To Advertise Contact - christmusicindia@gmail.com

Puthiya Vazhvu Tharum | புதிய வாழ்வு தரும்

Loading

புதிய வாழ்வு தரும் புனித ஆவியே
பரிசுத்த தெய்வமே பரலோக தீபமே

இருள் நிறைந்த உலகத்திலே
வெளிச்சமாய் வாருமையா
பாவ இருள் நீக்கி பரிசுத்தமாக்கும்
பரமனே வாருமையா

வர வேண்டும் வல்லவரே
வர வேண்டும் நல்லவரே
வர வேண்டும் வர வேண்டும்

தடைகள் நீக்கும் தயாபரரே
உடையாய் வாருமையா
ஒடுங்கிப் போன எங்கள் ஆவியை விரட்டி
உற்சாகம் தாருமையா

எண்ணெய் அபிஷேகம் எங்கள் மேலே
நிரம்பி வழியணுமே
மண்ணான உடலை வெறுத்து வெறுத்து என்றும்
பண்பாடி மகிழணுமே

உலகம் எங்கிலும் சுவைதரும் வெண்ணிற
உப்பாய் மாறணுமே
இலைகள் உதிராமல் கனிகள் தந்திடும்
மரமாய் வளரணுமே

துயரம் நீக்கி ஆறுதல் அளிக்கும்
தூயவர் வரவேணுமே
புலம்பல் மாற்றி மகிழ்ச்சியூட்டும்
புனிதரே வரவேணுமே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS