To Advertise Contact - christmusicindia@gmail.com

Puththam Puthiya Paadal | புத்தம் புதிய பாடல்

Loading

புத்தம் புதிய பாடல் தந்தார்
நித்தம் அவரைத் துதித்திடவே

காலையில் கூவிடும் பறவைகளும்
மாலையில் கூப்பிடும் விலங்குகளும்
இன்பமாய் இயேசுவை துதிக்கின்றன
என்னையும் துதித்திட அழைக்கின்றன

மரங்களில் மோதிடும் தென்றல் காற்றும்
பாறையில் மோதிடும் கடலலையும்
துள்ளியே களிப்புடன் துதிக்கின்றன
என்னையும் துதித்திட அழைக்கின்றன

காகங்கள் கரைந்திடும் குரலைக்கேட்டு
படைத்தவர் மகிழ்ந்திடும் வேளையிலே
பாவி என் பாடலில் துதி கேட்டு
என் தேவனை களித்திட மகிழுவேன் நான்

உள்ளத்தில் பாவங்கள் இருக்கும் வரை
உண்மையாய் துதித்திட முடியவில்லை
கல்வாரி இரத்தத்தால் கழுவப் பெற்றேன்
இன்பமாய் இயேசுவை துதித்து வாழ்வேன்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS