To Advertise Contact - christmusicindia@gmail.com

Raja Um Pirasannam | ராஜா உம் பிரசன்னம்

Loading

ராஜா உம் பிரசன்னம் போதுமையா
எப்போதும் எனக்குப் போதுமையா

பிரசன்னம் பிரசன்னம் தேவ பிரசன்னம்

அதிகாலமே தேடுகிறேன்
ஆர்வமுடன் நாடுகிறேன்

உலகமெங்கும் மயையையா
உம் அன்பொன்றே போதுமையா

இன்னும் உம்மை அறியணுமே
இன்னும் கிட்டி சேரணுமே

கரம் பிடித்த நாயகரே
கைவிடாத தூயவரே

ஆட்கொண்ட அதிசயமே
ஆறுதலே அடைக்கலமே

துதியினிலே வாழ்பவரே
துணையாளரே என் மணவாளரே

அநாதி தேவன் அடைக்கலமே
அவர் புயங்கள் ஆதாரமே

சகாயம் செய்யும் கேடகமே
மகிமை நிறை பட்டயமே

சீர்படுத்தும் சிருஷ்டிகரே
ஸ்திரப்படுத்தும் துணையாளரே

பெலப்படுத்தும் போதகரே
நிலைநிறுத்தும் நாயகரே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS