Romba Romba Nallavar | ரொம்ப ரொம்ப நல்லவர்

Loading

ரொம்ப ரொம்ப நல்லவரு எங்கள் இயேசு
நம்பி வந்த ஜனத்துக்கு நல்ல இயேசு – 2
எங்கள் இயேசு நல்ல இயேசு
நம்பி வந்த ஜனத்துக்கு நல்ல இயேசு – 2

கண்ணீரை துடைத்து கவலையை போக்குவார்
அருகிலே வந்து ஆறுதல் தருவார் – 2 – எங்கள் இயேசு

காயப்பட்ட இதயத்தை கரம் நீட்டி தொட்டு
கலங்காதே என்று அணைத்திட வருவார் – 2 – எங்கள் இயேசு

சத்திய வெளிச்சம் அவர் தான் அன்றோ
உம் துக்க நாட்கள் முடிந்தனவன்றோ – 2 – எங்கள் இயேசு

வெள்ளம் போல் சத்தியம் வந்திடும் போது
வெற்றிக்கொடி ஏந்தும் வல்லவர் அவரே – 2 – எங்கள் இயேசு

முழுமனதோடு அவரிடம் ஓடி வா
மன்னிப்பு வழங்கும் வள்ளலை தேடி வா – 2 – எங்கள் இயேசு

பணம் பொருளின்றி இலவசமாக
அவரன்பை சுவைத்திட வேகமாய் வாங்க – 2 – எங்கள் இயேசு

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS