பல்லவி
சாரோனின் ரோஜா இவர்
பள்ளத்தாக்கின் லீலி புஷ்பம்
அனுபல்லவி
ஜோதி விளங்கிடும் தேவ சமூகம்
சோபிக்கும் கர்த்தர் முகம்
மகிமை மா பெரிதே
மகிழ்வோம் கர்த்தருக்குள்
மா பிரதான ஆசாரியனாய்
மா பரிசுத்த ஸ்தலம்
தம் சரீரம் சபை நடுவே
தாம் உலாவுகின்றார் – கிறிஸ்து – சாரோனின்
நீதிமான் கூடாரமதில்
தாயின் துதி முழங்கும்
தூய ஆவி இறங்கிடவே
தேவ வரம் ஜொலிக்கும் நம்மீது – சாரோனின்
கீதா வாத்யம் கைத் தாளங்களும்
கேட்கும் உயர் சீயோனில்
துன்பம் மாறி இன்பமாகுதே
தேவாரதனையில் நமது – சாரோனின்
வேத வாக்கு தூது அருளும்
வேந்தன் கிருபாசனம்
காத்திருக்கும் தாசரிடம்
கர்த்தர் பேசுகின்றார் – மகிழ்ந்து – சாரோனின்
மா மணவாளன் ஏசு வருவார்
மங்களம் கொண்டாடுவோம்
ஆரவாரம் ஆகயமிதில்
அன்று பரமானந்தம் நமக்கு – சாரோனின்