சபையோரே எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்
ஜனங்களே எல்லோரும் அவரைப் போற்றுங்கள்
அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது
அவரது இரக்கம் என்றும் உள்ளது
நம் தேவன் உயர்ந்த செல்வந்தர் அன்றோ
தேவையான அனைத்தையும் மிகுதியாய் தருவார்
அநேக ஜனங்களுக்கு கொடுக்கச் செய்திடுவார்
கடன் வாங்காமல் வாழச் செய்திடுவார்
கர்த்தர் குரல் கேட்கும் ஆடுகள் நாம்
முடிவில்லா வாழ்வு நமக்குத் தந்திடுவார்
ஒருவனும் பறித்துக் கொள்ள முடியாதென்றார்
ஒரு நாளும் அழிந்து போக விடமாட்டார்
கர்த்தரோ நமக்கெல்லாம் உறைவிடம் ஆனார்
இன்னல்கள் நடுவிலே மறைவிடம் ஆனார்
விடுதலை கீதங்கள் பாட வைக்கின்றார்
வெற்றிக் கொடி அசைத்து ஆடவைக்கின்றார்
சொந்த மகனென்றும் பார்க்காமலே
நாம் வாழ இயேசுவை நமக்குத் தந்தாரே
அவரோடு கூட மற்ற எல்லா நன்மைகளும்
அருள்வார் என்பதும் நிச்சயம் தானே
தேவனாம் கர்த்தருக்கு ஊழியம் செய்தால்
உணவையும் தண்ணீரையும் மிகுதியாய் தருவார்
எல்லா நோய்களையும் அகற்றிடுவார்
குழந்தை பாக்கியமும் கொடுத்திடுவார்
கிறிஸ்துவின் வார்த்தைகள் நமக்குள் இருந்தால்
விரும்பிக் கேட்பதெல்லாம் கிடைத்திடுமே
மிகுந்த கனி தந்து சீடர்களாய் வாழ்வோம்
அதுவே தகப்பனுக்கு புகழ்ச்சி உண்டாக்கும்
துன்பத்தின் நடுவே நாம் நடக்கும்போதெல்லாம்
வலக்கரம் தாங்கி நம்மை வாழ வைக்கின்றார்
வாக்களித்து அனைத்தையும் செய்து முடிப்பார்
ஏக்கமெல்லாம் எப்படியும் நிறைவேற்றுவார்