To Advertise Contact - christmusicindia@gmail.com

Santhosha Vin Oliyae Iyaesu | சந்தோஷ விண் ஒளியே இயேசு

Loading

சந்தோஷ விண் ஒளியே இயேசு
சாந்த சொரூபி அவர்
பள்ளத்தாக்கின் லீலி – சாரோனின் ரோஜா
பாரில் மலர்ந்துதித்தார்

இன்ப பரலோகம் துறந்தவர்
துன்பம் சகித்திட வந்தவர்
பாவ மனிதரை மீட்டவர்
பலியாகவே பிறந்தார் – சந்தோஷ

பூலோக மேன்மைகள் தேடாதவர்
பேரும் புகழும் நாடாதவர்
ஒன்றான மெய் தேவன் இயேசுவே
என் ஆத்ம இரட்சகரே – சந்தோஷ

ஜீவன் வழி சத்தியம் எல்லாமிவர்
தேவாதி தேவ சுதன் இவர்
இயேசு அல்லாமல் வேறு யாருமில்லை
இரட்சண்யம் ஈந்திடவே – சந்தோஷ

ஆடம்பர வாழ்வை வெறுத்தவர்
அண்ணல் எளிமையாய் வாழ்ந்தவர்
எம்மைத் தம்மைப் போல மாற்றிடும்
இயேசுவைப் பின்பற்றுவோம் – சந்தோஷ

எங்கள் சமாதானப் பிரபு இவர்
இயேசு அதிசயமானவர்
வேதம் நிறைவேறும் காலமே
வேகம் வருகின்றாரே – சந்தோஷ

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS