Saruva Logaathibaa Namaskaaram | சருவ லோகாதிபா நமஸ்காரம்

கண்ணிகள்
சருவ லோகாதிபா நமஸ்காரம்!
சருவ சிருஷ்டிகளே நமஸ்காரம்!
தரை, கடல், உயிர், வான், சகலமும் படைத்த
தயாபர பிதாவே, நமஸ்காரம்!

திரு அவதாரா நமஸ்காரம்!
ஜெகத்திரட்சகனே நமஸ்காரம்!
தரணியின் மானுடர் உயிர் அடைந்தோங்கத்
தருவினில் மாண்டோய் நமஸ்காரம்!

பரிசுத்த ஆவி, நமஸ்காரம்!
பரம சற்குருவே நமஸ்காரம்!
அருபியாய் அடியார் அகத்தினில் வசிக்கும்
அரியசித்தே சதா நமஸ்காரம்!

முத்தொழிலோனே நமஸ்காரம்!
மூன்றிலொன்றோனே நமஸ்காரம்!
கர்த்தாதி கர்த்தா கருணாசமுத்திரா
நித்தியா திரியேகா நமஸ்காரம்!

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS