Sarva Sirushdikkum Ejamaanan | சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன்

Loading

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே
சர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரே
எங்கள் இதயத்தில் உம்மைப் போற்றிடுவோம்
என்றென்றும் பணிந்து தொழுவோம்
ஆ ஆ ஆ அல்லேலூயா (7) ஆமென்

வானம் பூமி ஒழிந்து போனாலும்
உம வார்த்தை என்றும் மாறாதே
இவ்வாழ்க்கை அழிந்து மறைந்துபோம்
விசுவாசி என்றென்றும் நிலைப்பான் – ஆ ஆ

கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள்
கிருபை எங்கள் மேல் ஊற்றுவீரே
ஆவி ஆத்துமா சரீரம் உம் சொந்தமே
அதை சாத்தான் தொடாமல் காப்பீரே – ஆ ஆ

எல்லா மகிமைக்கும் ஆண்டவர் நீரே
எல்லா ஆசீர்வாதத்திற்கும் ஊற்றே
எங்கள் இதயத்தை உம்மிடம் படைக்கின்றோமே
ஏங்குகின்றோம் உம் ஆசீர்பெறவே – ஆ ஆ

சபையின் அஸ்திபாரமும் நீரே
சபையின் தலையானவர் நீரே
சபையை போஷித்து பாதுகாத்தென்றுமே
சேர்த்துக் கொள்ள வருபவர் நீரே – ஆ ஆ

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS