சீயோன் தேசமதில் சேர்ந்தென்றும்
அன்பருடன் வாழ்வேன்
ஜெயகீதம் பேரின்பம்
துதிபாடி மகிழுவேன்
நகரத்தின் வீதிகள்
பொன்னாக மின்னுதே
இராப்பகல் இல்லையே – என்
இரட்சகர் வெளிச்சமே
என் கண்ணீர் யாவையும்
கரத்தால் துடைப்பாரே
சஞ்சலமில்லையே – என்
நேசர் மகிழ்ச்சியே
மண் சாயல் மாறியே
வின் சாயல் அணிந்துமே
மறுரூபம் அடைவேனே – என்
இயேசு போல் மாறுவேன்
நிதமும் என் நேசரை
துதிபாடி போற்றுவேன்
மகிபனின் தேசத்தில் – நான்
மகிமையாய் வாழுவேன்