Siluvai Meethe | சிலுவை மீதே

பல்லவி
சிலுவை மீதே தொங்கிய இயேசு
என்னில் அன்பு கூர்ந்தார்
நேசரின் அன்பு எந்தன் உள்ளத்தை
நெருக்கி எவிடுதே

சரணங்கள்
சுகந்த வாசனை பலியாய் தம்மை
உவந்து ஜீவன் தந்தார்
என்னில் அன்பு கூர்ந்ததாலே
என்னை அவருக்கே அர்ப்பணிக்கிறேன் – சிலுவை

கிறிஸ்து இயேசு அன்பிலிருந்து
பிரிக்க யாரால் கூடும்
உயர்வோ தாழ்வோ துன்பம் பசியோ
முற்றும் ஜெயம் நான் பெற்றிடுவேன் – சிலுவை

எம்மில் அன்பு கூர்ந்ததாலே
தம்மை தியாகம் செய்தார்
அவருடன் நான் அறையுண்டேனே
அவரே என்னில் ஜீவிக்கிறார் – சிலுவை

அறிவுக் கெட்டாநேசர் அன்பில்
அகலம் ஆழமுண்டோ
பகையாய் நின்ற பாவம் தகர்த்தார்
சபையில் மகிமை செலுத்திடுவோம் – சிலுவை

முடிவு வரையும் அன்பு கூர்ந்தார்
அடிமை வாழ்வடைய
அவரின் வருகை நாளில் நானும்
அவரைப் போல மாறிடுவேன் – சிலுவை

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS