Sinnanjsittu Kuruvi | சின்னஞ்சிட்டு குருவி

சின்னஞ் சிட்டுக் குருவியே (2) உன்னை
சந்தோஷமாய் படைச்சது யாரு..
அங்கு மிங்கும் பறந்துகிட்டு
ஆனந்தமாக பாடுறேயே – உன்னை
அழகாக படைத்தது யாரு

ஐயோ (2) இது தெரியாதா
ஒரு ஆண்டவர் எனக்கு மேலே இருக்கிறார்
உன்ன உணவும் கொடுக்கிறார்
உறங்க இடமும் கொடுக்கிறார் இந்த
உலகத்தையே படிச்சும் இருக்கிறார்

சின்னஞ் சிட்டுக் குருவியே (2) உன்
சிறகை எனக்கும் தந்திடுவாயா
உன்னைப் போல பாடிக்கிட்டு
உல்லாசமாய் பறப்பதற்கு ஒரு
உதவி எனக்கு செய்திடுவாயா

ஐயோ இனிமே அப்படிக் கேட்காதே
அந்த ஆண்டவர் கேட்டா கோபிச்சுக்குவாரு
எங்களைக் காக்கிற ஆண்டவர்
உங்களைக் காப்பது இல்லையா – அட
உங்களைத்தானே ரொம்பவும் நேசிக்கிறார்

ஆமாம் சிட்டுக் குருவியே (2)
இதுவும் எங்களுக்கு புரியவில்லையே
உங்களைக் காக்கிற ஆண்டவர்
எங்களைக் காக்க மாட்டாரோ
இந்த உண்மையும் ஏனோ தெரியவில்லையே
ல… ல… ல… ல…

Close Menu
error: Content is protected !!