To Advertise Contact - christmusicindia@gmail.com

Sonnapadi | சொன்னபடி

Loading

சொன்னபடி உயிர்த்தெழுந்தார்
சொல்தவறா நம் இயேசு
அல்லேலூயா ஆனந்தமே
அன்பர் இயேசு உயிர்த்தெழுந்தார்

சாவே உன் வெற்றி எங்கே
சாவே உன் கொடுக்கு எங்கே
சாவு வீழ்ந்தது வெற்றி கிடைத்தது
சகல அதிகாரம் நமக்கு உண்டு

விண்ணும் ஒழிந்து போகும்
மண்ணும் மறைந்து போகும்
ஆண்டவர் வாக்கோ இன்றும் என்றும்
அழியாதது மாறாதது

கிறிஸ்து உயிர்த்ததினால்
நாமும் உயிர்த்தேழுவோம்
ஆண்டவர் வருகை சீக்கிரம் அன்றோ
அபிஷேகம் பெற்று காத்திருப்போம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS