Stella Ramola & Daniel Davidson – Visuvasam விசுவாசம் – Lyrics

Kadugalavu visuvasam Siricha mugamai varuvaaru

ஒருபோதும் விசுவாசத்தை விட்டுவிடாதீர்கள்
நீங்கள் விசுவாசித்தால் எல்லாம் கூடுமே

கடுகளவு விசுவாசம் இருந்தாலே போதும்
ஏங்குகின்ற காரியங்கள் எல்லாமே ஆகும்

சிரிச்ச முகமாய் வருவாரு
சிறந்ததை எல்லாமே தருவாரு

யோபுவின் வாழ்க்கையைப் போல
பல வித (பல பல) கஷ்டங்கள் சூழ
சோராமல் கர்த்தரை நீ பிடித்துக்கொண்டால்

யோபுவின் ஆசீர்வாதம் உனக்குண்டு
இழந்ததை இரண்டுமடங்காய் பெற்றுக்கொண்டு
இனி செழிப்பாக நீ வாழ்ந்திடு

குழந்தையின் செல்வத்திற்காக
ஏங்கிடும் சாராளாக
பல நாட்கள் காத்திருந்து அழுகின்றாயோ

ஆபிரகாமின் ஆசீர்வாதம் உனக்குண்டு
நாளானாலும் நிச்சயமாக முடிவு உண்டு
உன் நம்பிக்கை வீண் போகாது

error: Content is protected !!
ADS
ADS
ADS