fbpx

Sthoththarippen | ஸ்தோத்தரிப்பேன்

ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் யேசு தேவனை
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஸ்தோத்தரிப்பேனே

உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரப் பலியை
இயேசுவின் நாமத்தினாலே செலுத்துகின்றேன் யான்

பாவக்கறை நீங்க என்னை முற்றிலுமாக
உம சுத்தமுள்ள இரத்தத்திற்குள் தோய்த்ததினாலே

என்னுடைய காயங்களை உம காயங்களாலே
என்றைக்குமாய் தீர்த்ததினால் ஸ்தோத்தரிப்பேன் யான்

ஆகாயத்து பட்சிகளை போஷிக்கும் தேவன்
தினமும் என்னை போஷிப்பதால் ஸ்தோத்தரிப்பேன் யான்

நாளைத் தினம் ஊன் உடைக்காய் என் சிந்தைகளைக்
கவலையற்ற தாக்கினதால் ஸ்தோத்தரிப்பேன் யான்

சீக்கிரமாய் வந்திடுவேன் என்றுரைத்தோனே
சீக்கிரமாய் கான்பதினால் ஸ்தோத்தரிப்பேன் யான்

Close Menu
error: Content is protected !!